இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய் 55 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் உடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 177 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் ஜானி பேர்ஸ்டோவ்வும் 124 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இறுதியாக இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளது.
இந்திய அணியில் கே .எல் ராகுல் 108 , கேப்டன் கோலி 66, ரிஷாப் பண்ட் 77 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…