ENGvsNED: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

Published by
செந்தில்குமார்

ENGvsNED: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று, புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் 40 ஆவது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியானது நெதர்லாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணி ஏற்கனவே வெளியேறியதை தொடர்ந்து, இன்று நடைபெறுகிற லீக் போட்டியில் தனது திறமையை வெளிக்காட்ட களமிறங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன், 2 புள்ளிகளை எடுத்து தொடரை விட்டு வெளியேறியது.

நெதர்லாந்து அணி ஆனது 7 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.  நெதர்லாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதால் தொடரை விட்டு வெளியேறாமல் உள்ளது. ஏனென்றால் அந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், 8 புள்ளிகள் உடன் பட்டியலில் முன்னிலைக்கு சென்று விடும்.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 6 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த ஆறு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(w/c), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்

நெதர்லாந்து

வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(w/c), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்

Published by
செந்தில்குமார்

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

2 hours ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

3 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

4 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago