ஐபிஎல் தொடரின் 13வது சீசன் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை காண அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணியும் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடினப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா கூறியது தற்பொழுது என்னுடைய உடல் மற்றும் மன நிலையை இரண்டும் சிறப்பாக உள்ளது. ஐபிஎல் போட்டிக்கு சிறப்பாக பயிற்சி எடுத்து போட்டிக்காக காத்துள்ளேன். மேலும் எவ்வளவு காலங்கள் போட்டியில் இருந்து விலகி இருக்கிறோம் என்பது முக்கியமில்லை.
மீண்டும் வரும்போது நாம் எவ்வாறு நம் திறமையை வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பண்டியா வரும் போட்டிகளில் மிகவும் பொருத்தமாக பங்கேற்று சிறப்பாக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…