இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் அடுத்து அடுத்து இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான அக்ஸர் 6 விக்கெட்களையும் அஸ்வின் 3 மற்றும் இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினார்.இப்படி இந்திய அணியின் சூழலில் இங்கிலாந்து சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது.அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை ஆடி வந்தனர்.இதற்கிடையில் சுப்மான் கில் 51 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா வீசிய பந்தில் ஜாக் கிராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் அக் லீச் வீசிய பந்தில் LBW ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.இப்படி அடுத்ததடுத்து விக்கெட்கள் இழக்க விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி நிதான ஆட்டத்தை விளையாடி வந்த நிலையில் ஜாக் லீச்யிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் விராட் கோலி 27(58).முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 99/3 (33) ரன்களை எடுத்துள்ளது.தற்பொழுது களத்தில் ரோஹித் ஷர்மா 57(82) மற்றும் ரகானே 1(3) களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…