சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ பெயிட் சிம் கார்ட் – பிரக்யன் ஓஜா விமர்சனம்..!!

Published by
பால முருகன்

சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ – பெயிட் சிம் கார்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா விமர்சனம் செய்துள்ளார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின்  முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் விளாசினார். 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை கடைசிவரை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். ஆனால், பஞ்சாப் அணி இறுதியாக  4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அந்த போட்டியை தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை.

இதனால் பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து  பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா இதுகுறித்து கூறுகையில், ” சஞ்சு சாம்சன் சிம்பாவேவுக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடியதன் மூலம் அறிமுகமானார். அவர் வரும் போது ரிஷப் பண்ட் , இஷான் கிஷான் ஆகியோர் இல்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தும் அவர் சரியாக விளையாடவில்லை. சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ – பெயிட் சிம் கார்ட் போல் எப்போதும் சிறப்பாக விளையாடாமல் எப்போதுவாகத்தான் சிறப்பாக விளையாடுகிறார். அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அதைபோல் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா  உள்ளிட்ட வீரர்கள் போஸ்ட் பெயிட் சிம் கார்டை போன்றவர்கள். இவர்கள் தொடக்கத்தில் சுமாராக விளையாடவில்லை என்றாலும், சிறிது காலம் இந்திய அணியில் தாக்குப்பிடித்து திரும்பவும் பார்முக்கு வந்துவிடுவார்கள். ஆனால் இளம் வீரர்கள் ப்ரீ – பெயிட் சிம் கார்ட் போல இருக்கிறார்கள் அவர்களும் போஸ்ட் பெயிட் சிம் கார் போன்று மாற நிலையான ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்டுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago