முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால், புல்புல் சாஹாவை திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்,வர்ணனையாளர் மற்றும் தற்போது பயிற்சியாளராக உள்ள அருண் லால்(வயது 66),தன்னை விட 28 வயது குறைவான ஆசிரியராக இருக்கும் புல்புல் சாஹா என்பவரை நேற்று (மே 2 ஆம் தேதி) கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் இன்னில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் லால் மற்றும் புல்புல் இருவரும் சிறிது காலம் டேட்டிங் செய்து வருவதாகவும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே,லால் தனது முதல் மனைவி ரீனாவைப் பிரிந்தார்.ஆனால் தனது உடல்நிலை குறைவு காரணமாக ரீனா இன்னும் லாலுடன் வாழ்கிறார் என்றும்,ரீனாவின் சம்மதத்தை பெற்றுதான் லால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.மேலும் இந்த ஜோடி திருமணத்திற்குப் பிறகு ரீனாவை கவனித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,திருமணத்தின் புகைப்படங்களை புல்புல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து,”எங்களை ஆதரித்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…