ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது. இரு அணிகளும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. சிட்னி டெஸ்ட் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
வழக்கமாக செய்யப்பட்ட பரிசோதனையில் ஹெட்-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அவர் அடுத்த 7 நாட்களுக்கு மெல்போனில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் மீதமுள்ள அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் PCR மற்றும் RAT சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணியில் மிட்ச் மார்ஷ், நிக் மேடின்சன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். ஹோபார்ட்டில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஹெட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…