#image_title
GTvsMI : ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வந்த குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், குஜராத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. குஜராத் அணியில் களமிறங்கிய வீரர்கள் பொறுமையுடன் ஆட்டத்தில் நீடிக்காமல் சொற்ப ரன்களை விக்கெட்டை இழந்தனர்.
குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றும் பொறுமையான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. இதனால் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என பேட்டிங் செய்ய களமிறங்கியது மும்பை அணி. வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கிய மும்பை தங்களது முதல் ஓவரிலேயே இஷான் கிஷனின் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அதை தொடர்ந்து 30 ரன்களில் மீண்டும் அடுத்த விக்கெட்டை இழந்து, மும்பை அணி இக்கட்டான நிலைக்கி தள்ளபட்டது. அதன் பிறகு களமிறங்கிய இம்பாக்ட் (IMPACT) வீரரான டெவால்ட் ப்ரீவிஸ்ஸும், தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவும் களத்தில் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் மும்பை அணியின் ஸ்கோரும் உயர தொடங்கியது.
ரோஹித் சர்மா நன்கு விளையாடி கொண்டிருந்த நிலையில் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் (LBW). அவரை தொடர்ந்து டெவால்ட் ப்ரீவிஸ்ஸும், மோஹித் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பிறகு களத்தில் விளையாடிய டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் விளையாடினாலும் இறுதி வரை நிற்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர்.
விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை அணிக்கு இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அப்போது களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் சிக்ஸரும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்தார். தொடர்ந்து 3-வது பந்தில் பாண்டியா ஆட்டமிழக்க மும்பை அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
அவரை தொடர்ந்து அடுத்த பந்திலும் மும்பை அணி விக்கெட்டை இழக்க குஜராத் அணி வெற்றியை உறுதி செய்தது. இதனால் மும்பை அணி இறுதியில் 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி 2013 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது கிடையது. அது தற்போது ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலும் தொடர்கிறது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…