Vaibhav Pandya arrested [image source: x/@hardikpandya7]
Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 40% முதலீடும், வைபவ் பாண்டியா 20% முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் வைபவ் பாண்டியாவிடம் இருந்துள்ளது. இந்த நிலையில், மும்பை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் பரபரப்பான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுக்கு தெரியாமல், வைபவ் பாண்டியா ஒரு தனி பாலிமர் நிறுவனத்தை தொடங்கி, எங்கள் மூவருக்குமான இருக்கும் நிறுவனத்தில் செய்ய வேண்டிய விற்பனையை அவரது சொந்த நிறுவனத்தின் பெயரில் செய்துள்ளார். அதேசமயம் அவரது 20% லிருந்து 33% ஆக மாற்றி இருக்கிறார்.
மேலும், எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ஒரு கோடியை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதாகவும், சுமார் ரூ.4.3 கோடி வரை வைபவ் பாண்டியா ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வைபவ் பாண்டியாவை மும்பை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…