48 ஆண்டு உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த ஹரிஸ் ரவூப்..!

48 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 30 வயதான வலது கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே உலகக்கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆசியாவின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். உலகக்கோப்பையின் 500 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஹரிஸ் ரவூப் பெற்றுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர் அடில் ரஷித் 526 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த சாதனையை தற்போது ஹரிஸ் ரவூப் முறியடித்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஹரிஸ் ரவூப் 9 போட்டிகளில் 533 ரன்கள் கொடுத்துள்ளார். இந்த உலகக்கோப்பையில் 16 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8-வது இடத்தை ஹரிஸ் ரவூப் பிடித்துள்ளார்.

அதேபோல பாகிஸ்தான் அணியின் மற்றோரு வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி நடப்பு உலகக்கோப்பையில் 481  ரன்கள் கொடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 6 போட்டியில் பாகிஸ்தான் பவர் பிளேயில் 60 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் தான் பாகிஸ்தான் அணி  படுதோல்வி அடைந்ததை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!

நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க இந்த மோசமான சாதனையை நெருங்கினார். ஆனால் உலகக்கோப்பையில் இலங்கை அணியின் அனைத்து லீக் போட்டிகள் முடித்தால் அவர் இந்த மோசமான சாதனையை படைக்கவில்லை. தில்ஷன் மதுஷங்க 9 போட்டிகளில் 525 ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் நடப்பு உலகக்கோப்பையில் 21 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss