virat kohli and rohit [Image source : file image]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். பிறகு அந்த சாதனையை விராட் கோலியே திரும்ப மீட்டெடுத்தார்.
அதன்படி, விராட் கோலி, உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்களை எடுத்தவர் என்ற தனது சாதனையை வைத்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று கேப்டன் ரோஹித் சர்மா கோலியின் 1,803 ரன்களை முந்தி 1,809 ரன்களை எட்டியதன் மூலம் ரோஹித் சாதனை படைத்தார்.
அதன்பிறகு நேற்று இந்திய இன்னிங்ஸின் 15வது ஓவரில் கோலி மீண்டும் ரோஹித்தை முந்தி சாதனையை மீட்டெடுத்தார். மேலும் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட்கோலி 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…