PBKSvSRH [file image]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர்.
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர்.
நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 21 ரன் எடுத்து தவானிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஐடன் மார்க்ராம் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து நிதிஷ் ரெட்டி களமிறங்கினார். அடுத்த ஓவரிலே மறுமுனையில் அபிஷேக் சர்மா 11 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதனால் ஹைதராபாத் அணி பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 11 , ஹென்ரிச் கிளாசென் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினர். பின்னர் கூட்டணி அமைத்த நிதிஷ் ரெட்டி , அப்துல் சமது இருவரும் சிறப்பாக விளையாடினர். இதற்கிடையில் நிதிஷ் ரெட்டி 31 பந்தில் 51 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.
நிதானமாக விளையாடி வந்த அப்துல் சமது 12 பந்தில் 25 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். நிதிஷ் ரெட்டி, அப்துல் சமது இருவரும் சேர்ந்து 19 பந்தில் 50 ரன்கள் குவித்தனர். அப்துல் சமது ஆட்டமிழந்த அடுத்த 2-வது பந்திலே நிதிஷ் ரெட்டியும் 64 ரன்கள் எடுத்து நடையை காட்டினார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல், சாம் கரன் தலா 2 விக்கெட்டையும், ரபாடா 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…