இனி நீங்க தேவை இல்லை ..! பென் ஸ்டோகேஸை ஓரம் கட்டிய இங்கிலாந்து வாரியம் ?

Published by
அகில் R

Ben Stokes : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை.

ஐபிஎல் 2024 தொடர் முடிந்த பிறகு ஜூன் – 2 ம் தேதி இந்த ஆண்டிற்கான டி20 உலககோப்பையானது அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி விடும். இந்த தொடரில் பங்கு பெற உள்ள அணியான இங்கிலாந்து அணியில் நட்சத்திர ஆல்- ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியில் எடுக்கவில்லை என்று அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதற்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். மேலும், அவரை இந்த தொடர்க்கு பரிசீலிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) யிடம் அவரே கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில்  அவரை ECB எடுக்கவில்லை என்று தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு முழங்கால் காயத்துடன் அவதி பட்டு வந்தார் இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்து வீசாமல் இருந்தார். அதனை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட தன்னை தயார்படுத்திக் கொண்டு அந்த தொடரிலும் விளையாடியினார். அந்த உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு முழங்கால் அறுவை சிகிச்சைக்கு அவர் சென்றார்.

அதன் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுடனான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கலந்து கொண்டும் விளையாடினார். அந்த தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் தான் பென் ஸ்டோக்ஸ் கடைசியாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடைபெற போகும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார்.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

6 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

7 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

7 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

8 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

8 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

10 hours ago