Robin Uthappa [file image]
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தான் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என இந்த தொடர் தொடங்கும் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும், அவரது வயதும், காலில் அவருக்கு ஏற்பட்ட காயங்களும் இருந்தாலும் கூட ரசிகர்களுக்காக களமிறங்கி போட்டிக்கு இரண்டு, மூன்று சிக்ஸர்களையும் விளாசி வருகிறார். இதை அவரது ரசிகர்களும் மிகவும் விரும்பி அவருக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை வீழ்த்திய பிறகு பேசி இருந்த எம்.எஸ்.தோனி தான் அடுத்த சீசன் விளையிடுவதாகவும் கூறி இருந்தார். அதே போல தற்போது பல சிஎஸ்கே ரசிகர்கள் அவரை மேலும் ஒரு தொடர் விளையாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் அவர் எங்களுக்காக செய்ததே போதுமானது எனவும், அவர் ஓய்வு பெறலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல கிரிக்கெட் பிரபலங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தோனி அடுத்த ஐபிஎல் 2025 தொடரும் விளையாடுவார் என வர்ணனையில் பேசும் பொழுதோ அல்லது நேர்காணலிலோ பேசி வருகின்றனர். அந்த வரிசையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா நேற்று ஜியோ சினிமாவில் தோனியின் ஓய்வை குறித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “என்னை பொறுத்த வரை நான் என்ன நினைக்கிறன் என்றால் தோனிக்கு இது அவரது கடைசி சீசனாக இருக்காது.
அவர் மேலும் எனக்கு என்ன தோணுகிறது என்றால் அடுத்த ஐபிஎல் தொடரும் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. அதே போல ருதுராஜ் கேப்டனாக ஒரு அணியை நாக்-அவுட் சுற்று வரை கொண்டு வந்துள்ளார். அதுவே அவருக்கும் அவரது அணிக்கும் ஒரு உத்வேகத்தை அது அளிக்கும். மேற்கொண்டு நடப்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்”, என தோனியின் ஓய்வை பற்றி கூறியதோடு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனான ருதுராஜை பற்றியும் ஜியோ சினிமாவில் பேசிய போது கூறி இருந்தார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…