Cameron Green [Image source : AP Photo]
சுப்மன் கில் கேட்ச்சை நான் உறுதியாக பிடித்தேன். மூன்றாவது நடுவரும் அதனை உறுதிப்படுத்தினார் என கேமரூன் கிரீன் விளக்கம் அளித்துள்ளார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது ஆடுகளத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்சின் 8வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் போலந்த் பந்துவீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
க்ரீன் பிடித்த கேட்ச் ஆனது புல் தரையில் பட்டது போல தெரிந்ததால் மூன்றாவது நடுவர் வரை சென்று சுப்மன் கில் அவுட் என உறுதியானது. அந்த கேட்ச் புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்த சுப்மன் கில் அதில் கேட்சை விமர்சிக்கும் வண்ணம் எமோஜி பதிவிட்டு இருந்தார். இந்த கேட்ச் குறித்த சர்ச்சை இணையதளத்தில் வெகு வைரலாக பரவி வந்தது. ஏனென்றால் அது புல்லில் பட்டு கேட்ச் பிடித்தது போல இருந்தது.
இந்த சர்ச்சை குறித்து, கேட்ச் பிடித்த ஆஸ்திரேலேய வீரர் கேமரூன் கிரீன் கூறுகையில், நான் அந்த கேட்சை பிடித்ததும், எனது கையில் பட்டதாக தான் நான் உறுதியாக நம்பினேன். அதனால் தான் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். மேலும் ஆட்டத்தின் மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோவும் அதனை உறுதிப்படுத்தினார் என தனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்.
இன்று கடைசி நாள் ஆட்டம். இன்றைய போட்டியில், இந்திய அணி 280 ரன்கள் அடித்தால் கோப்பையை கைப்பற்றும். இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். அதன் பின்னர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத் ஆகியோர் இருக்கின்றனர். இதனால் இன்றைய நாள் ஆட்டம் ஒருநாள் ஆட்டம் போல மிக விறுவிறுப்பாக இருக்க போவது உறுதி.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…