ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த ‘தல’ தோனி !!

Published by
அகில் R

சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது. இதனால், ‘தல’ தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என அவரது ரசிகர்களால் சமூகத்தளத்தில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று அவர் துபாய் ஐ 103.8 (Dubai Eye 103.8) என்ற யூட்யூப் சேனலில் இரு நிகழ்ச்சியில் அவர், அவருடன் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் ஆகியோரும் அதில் கலந்து கொண்டு பேசி இருந்தனர்.

அதில் பேசிய தோனி சிஎஸ்கே தான் என் உணர்வு என்றும், சென்னை அணி தான் என் பலம் என்றும் பேசி இருந்தார். மேலும், அந்த பேட்டியில் அவர் தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும் என்றும் கூறி இருந்தார். அவர் அந்த பேட்டியில் பேசிய போது, “எனக்கு தனிப்பட்ட முறையில் ட்விட்டரை விட இன்ஸ்டாக்ராம் தான் பிடிக்கும் ஏன் என்றால் ட்விட்டரில் என்னால் ஒரு நல்ல விஷயங்களை கூட பார்க்க முடிவதில்லை.

எப்போது பார்த்தாலும் ஏதாவது சர்ச்சை ஒன்று அதில் போய்க்கொண்டே இருக்கிறது குறிப்பாக இந்தியாவில் இது அதிகமாக இருக்கிறது. யாராவது ட்விட்டரில் ஒரு நல்ல விஷயம் சொன்னால் கூட அதை ஒரு சர்ச்சையாக அதனை மாற்றிவிடுகின்றனர். ஆனால் இன்ஸ்டாகிராம் அப்படி அல்ல நான் அதில் ஏதாவது புகைப்படமோ அல்லது வீடியோவோ பதிவிட்டால் அதற்கும் இதை போல விமர்சனங்களும், சர்ச்சைகளும் வரதான் செய்கிறது. ஆனால், ட்விட்டரை விட இதில் கம்மியாகவே வருகிறது.

அதனால் தான் நான் இன்ஸ்டாக்ராமை பரிந்துரைக்கிறேன், நான் இன்ஸ்டாக்ராமில் சரியாக வருவதும் இல்லை. ட்விட்டருடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்ஸ்டாகிராமில் தான் கம்மியான சர்ச்சைகள் வருகிறது. இருந்தாலும், நான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்காக ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ போடுவதால்.. ‘சரி இவர் சந்தோசமாக எங்கோ, எதையோ செய்து கொண்டிருக்கிறார் என்று எடுத்துக்கொள்வார்கள் என்பதர்க்கவே தான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறேன்”, என்று துபாய் ஐ 103.8 யூடுயூப் சேனல் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

4 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

24 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago