நம்பர் 1 பேட்ஸ்மேன் இருந்திருந்தால் இப்படி செஞ்சிருப்பீங்களா… சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம்.!

SunilGavaskar

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இந்திய வீரர் அஷ்வின் அணியில் சேர்க்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக நுழைந்த இந்திய அணியை, ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இந்தியாவின் இந்த தோல்விக்கு பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளரான அஷ்வினை சேர்க்காதது குறித்து தற்போது முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இறுதிப் போட்டியில் அஷ்வினை சேர்க்காதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார். உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக இருந்து வரும் அஷ்வினை நீங்கள் எப்படி அணியில் சேர்க்காமல் இருந்தீர்கள்.

ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில், அஷ்வின் நிச்சயம் இந்திய அணிக்கு உபயோகமாக இருந்திருப்பார். ஆஸ்திரேலிய அணியின் இடது கை பேட்ஸ்மன்கள் தான் முதல் இன்னிங்சில் சதம் மற்றும், இரண்டாவது இன்னிங்சில் மற்றொரு இடது வீரர் அடித்த அரைசதம் இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி தோல்விக்கு வழி வகுத்தது.

இந்த நிலையில் அஷ்வின் அணியில் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய அணியின் இடதுகை பேட்டர்களின் விக்கெட்டை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்திய அணிக்கு அவர் துருப்புச் சிட்டாக இருந்திருப்பார். இதுவே உங்கள் அணியில் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனை இதே காரணத்துக்காக, அவர் இங்கிலாந்து மைதானங்களில் ரன்கள் குவிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து கழட்டி விட்டிருப்பீர்களா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அஷ்வின் சேர்க்கப்பட்டிருந்தால்,  அவர் இந்நேரம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பார். அவரை இந்திய அணியில் அடிக்கடி டிராப் செய்து ரவி சாஸ்திரி, விராட் கோலி தற்பொழுது ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் என அனைவரும் தவறு செய்து வருகின்றனர்.

இந்திய அணியில் அஷ்வினை போன்று வேறு எந்த வீரரும் இப்படி நடத்தப்பட்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அஷ்வினை அவர்கள் நடத்தியுள்ளனர் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்