புடிக்கலன்னா போக வேண்டியது தான.! உன்ன யாரு இழுத்து பிடிச்சா?… சி.வி.சண்முகம் காட்டம்

cv shanmugam

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என அதிமுக எம்பி சிவி சண்முகம் பேட்டி.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளதாகவும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்து, கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். அண்ணாமலையின் கருத்தால், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம், ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ எந்த தகுதியும் கிடையாது.

ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியின் தலைவர் தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்போதெல்லாம், அவர் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மாமூல் வாங்கிட்டு இருந்திருப்பாரு. 40 சதவீத கமிஷன் என்றால் பாஜக ஆட்சியில் தான். அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித்ஷா சொல்லும்போது அண்ணாமலை அமைதியாக இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அண்ணாமலை தனி நோக்கத்துக்காக செயல்படுகிறார். ஜெயலலிதாவை குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ ஏன் கவுன்சிலராகவோ கூட அண்ணாமலை இருந்ததில்லை எனவும் கடுமையா விமர்சித்தார்.

விருப்பம் இல்லையென்றால் கூட்டணியைவிட்டு வெளியேறலாம், உனக்கு அதிமுக புடிக்கலன்னா போக வேண்டியது தான..? உன்ன யாரு இழுத்து பிடிச்சா?, ஏன் எங்களை பிடிச்சி தொங்கிட்டு இருக்க? பாஜக வேறு, அண்ணாமலை வேறு. தனி அஜெண்டாவோடு அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்றார்.

மேலும், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலை மீது அவர் கட்சியை சேர்ந்தவர்களே புகார் கொடுத்து வருகிறார்கள். “திமுகவின் ‘B’ டீமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரியவரும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்