உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னறியது.

இந்த சூழலில், கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் உலகக்கோப்பை தொடரில் எஞ்சிய போட்டியிகளில் இருந்து நீக்கப்படுவதாக பிபிசிஐ அறிவித்தது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயம் காரணமாக இரண்டு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் அவர் ஆடவில்லை. காயம் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹர்த்திக் பாண்டியா, அரையிறுதி சுற்றுக்கு முன் இந்திய அணியில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், அவர் உலகக்கோப்பை எஞ்சிய போட்டிகளில் இருந்தே நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.!

நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். முதல் நான்கு போட்டிகளில் அணியில் 3வது வேகப் பந்துவீச்சாளராக இருந்தார். இந்த சூழலில் காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. ஹர்த்திக் பாண்டியாவுக்கு பதிலாக இளம் இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இது கடினமாக உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு போட்டியிலும்,  இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தி, நான் அணியுடன் இருப்பேன். மேலும், எனக்கு அளித்த வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்திய அணி சிறப்பாக உள்ளது. அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago