நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் , பாகிஸ்தான் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை யும் இழந்து 307 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது கூறுகையில் , பீல்டிங்கில் நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்தியா ,ஆஸ்திரேலியா போன்ற அணிகளை வீழ்த்த வேண்டும் என்றால் கண்டிப்பாக பீல்டிங்கில் அதிக முன்னேற்றம் தேவை என கூறினார்.
மேலும் வலுவான அணிகளுடன் விளையாடும் போது பேட்டிங் ,பீல்டிங் என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை விட நாங்கள் அதிக தவறுகளை செய்தோம்.முதல் 30 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இல்லை.எங்கள் அணி வீரர்கள் தவறான ஷாட்களை அடித்ததும் நாங்கள் தோற்பதற்கான ஒரு காரணம் என கூறினார்.
இந்த அனைத்து தவறுகளையும் திருத்தி கொண்டு இந்திய அணியுடன் மிக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல. மேற்கு திசை காற்றின் வேக…
கான்யூனிஸ் : காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில்…
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…