இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், வலுவான நிலையில் பாகிஸ்தான் 221/5 ரன்கள்.!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் இரண்டாம் நாளில் 221/5 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, விளையாடும் 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியில், தனஞ்செய டிசில்வாவின் சதத்தால்(122 ரன்கள்) முதல் இன்னிங்சில் 312 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹ்மது ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணி, முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறினர். கேப்டன் பாபர் அசாம் 13 ரன்கள், அப்துல்லா ஷாபிக் 19 ரன்கள், இமாம் உல்-ஹக் 1 ரன் என ஆட்டமிழக்க, ஷான் மசூத் 39 ரன்கள், ஷாத் ஷகீல் 69* ரன்கள் மற்றும் அகா சல்மான் 61*ரன்கள் எடுத்து அணி நல்ல ஸ்கோரை எடுக்க வித்திட்டனர்.
ஷாத் ஷகீல் மற்றும் அகா சல்மான் இருவரும் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து சரிவிலிருந்து பாகிஸ்தான் அணியை மீட்டுக் கொண்டுவந்தனர். ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் இன்றைய ஆட்டம் தடை பட்டுள்ளது. தற்போது வரை பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 2 ஆம் நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.