இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது டி-20 போட்டி ராஜ்கோட்டில் உள்ள செளராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்து. இதில் அதிகபட்சமாக முஹம்மது நைம் 36 ரன்கள் எடுத்து இருந்தார். கேப்டன் முஹமதுல்லா மற்றும் சௌமியா சர்கார் இருவரும் தலா 30 ரன்கள் எடுத்து இருந்தனர். இந்திய அணி சார்பாக சாஹல் 4 ஓவர் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்திருந்தார்.
இதனால் 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இயக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்ற போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மருந்தாக கேப்டன் ரோஹித் சர்மா ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 43 பந்துகளில் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 15.4 ஓவரிலேயே 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. லோகேஷ் ராகுல் 8 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்தும் களத்தில் நின்றனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்கிற கணக்கில் சமன் செய்துள்ளது. இறுதி போட்டி வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது. அன்று வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்பதால் இரு அணியும் தொடரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…