4 ஓவர்க்கு 80% இந்திய அணியின் ஊதியத்தை பரித்த ஜசிசி.!

Published by
kavitha
  • கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பதிவுசெய்து சாதனை படைத்து வரும் இந்திய அணி
  • நியூசிலந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அபராதம்.மூலம் ஹாட்ரிக்  அடித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக விளையாடி, அத்தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது.தற்போது 3ஒருநாள்  போட்டிகள் அடங்கிய தொடர் துவங்கியுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள்  தொடர் வரும் 21ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி  தாமதமாக பந்து வீசி தொடர்ந்து  மூன்று சர்வதேச போட்டிகளில் மிகவும் தாமதமாக பந்து வீசி இந்திய அணி ஹாட்ரிக் அடித்துள்ளது.

இதற்கு முன்னதாக நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகளில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக சொல்லப்பட்டது.அதற்காக 4 போட்டிக்கு  40 % மும் ,5வது போட்டிக்கு 20% என அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.அப்படி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் தாமதமாக பந்து வீசி உள்ளது.இது தொடர்ந்து அணிக்கு மூன்றாவது முறையாகும்.

இது தொடர்பாக கூறப்படுகையில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் 4 ஓவர்கள் குறைவாக இந்திய அணி வீசியுள்ளது . இதனால் வீரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.2 பிரிவின் கீழ், இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில்  தாமதமான  பந்து வீச்சை இந்திய கேப்டன் கோலி ஒப்புக்கொண்டார். அதன்படி  ஒரு ஓவர்க்கு 20%ம் என, 4 ஓவர்களுக்கு இந்திய வீர்களின் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 80% அபராதமாக விதிக்கப்பட்டது.சாதனையில் ஹாட்ரிக்   படைப்பது மட்டுமல்லாமல் அபராதம் கட்டுவதிலும் இந்திய அணி ஹாட்ரிக் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

2 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

3 hours ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago