நிதானமாக விளையாடிய இந்தியா..! நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 164/3 ரன்கள் குவிப்பு..!

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 164/3 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி, சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. இருந்தும் 84.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை டிக்ளெர் செய்தது.
இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 443 ரன்கள் முன்னிலையில் இருப்பதால், 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் கில் களமிறங்கினர். இதில் கில் 11 ரன்களுடன் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா அரைசதத்தை தவறவிட்டு 43 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின், களமிறங்கிய விராட் கோலி, ரஹானே ஜோடி பொறுப்பாக விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். தற்போது இந்திய அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விராட் கோலி 44* ரன்களும், ரஹானே 20* ரன்களும் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி அடைவதற்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது.