டிக்டாக் ‘ஸ்கார்ஃப் கேம்’ சவால்..! பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுமி..!

பிரான்சில் 16 வயது சிறுமி ‘ஸ்கார்ஃப் கேம்’ எனப்படும் டிக்டாக் சவாலை முயற்சித்தபோது உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டிக்டாக் செயலி ஆனது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் இன்னமும் செயலில் தான் உள்ளது. இந்த டிக்டாக் மோகத்தால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில், பிரான்சில் 16 வயது சிறுமி ஸ்கார்ஃப் கேம் எனப்படும் டிக்டாக் சவாலை செய்வதற்கு முயற்சித்தபோது உயிரிழந்துள்ளார்.
இது கடந்த ஆண்டில் பலரால் முயற்சிக்கப்பட்டு வந்த பிளாக்அவுட் என்ற சவாலை போலவே இதும் உள்ளது. இந்த பிளாக் அவுட் சவாலானது மக்கள் தங்களால் எவ்வளவு நேரம் அவர்களது மூச்சை பிடித்து வைத்துக்கொண்டு இருக்கமுடியும் என்பதாகும். அதேபோல, இந்த சவாலில் கழுத்தில் ஸ்கார்ஃப் போட்டு மூச்சி விடாமல் இருக்க முயற்சிக்கின்றனர்.
தங்களால் மூச்சி விடமுடியாத நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்ளும் ஒரு மரண விளையாட்டு ஆகும். பிளாக்அவுட் சவால் போலவே, இந்த ஸ்கார்ஃப் கேம் சவாலும் மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை நிறுத்துகிறது. மேலும் வலிப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விடுகின்றனர்.