இந்திய அணி அபார வெற்றி.! இன்னிங்ஸ் தோல்வியை தழுவிய வெஸ்ட் இண்டீஸ்.! ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால்.!

INDvWI Result

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே டாமினிகா மைதானத்தில் புதன் கிழமை இரவு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணியும், கிரைக் ப்ராத்வைட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கின.

முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தது. இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட இண்டீஸ் அணி தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ப்ராத்வைட் கூட ஏமாற்றம் அளித்தார். முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய அணி 64.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடி முதல் நாளிலேயே நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து நேற்று இரண்டாம் நாள் துவக்கத்தில் இருந்தும் அதே நிதானத்தோடு ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர்.

அதிலும் ஜெய்ஸ்வால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி 143 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். கேப்டன் ரோஹித் ஷர்மா 103 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். சுப்மன் கில்  6 ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

வலுவான துவக்கத்துடன் மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. 3ஆம் நாள் ஆட்டத்திலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால்  171 ரன்கள் குவித்தார். விராட் கோலி 76 ரன்கள் குவித்து இருந்தார். ஜடேஜா தனது பங்கிற்கு 37 ரன்கள் எடுத்திருந்தார். 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எனும் நிலையில் இருந்த நிலையில் டிக்ளேர் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இரண்டாவது இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தையே வெஸ்ட் இண்டீஸ் அணி வெளிப்படுத்தியது. களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஒருவர் கூட 30 ரன்களை கூட தொடாமல் வெளியேறினர். இந்திய அணி சார்பில் வெகு சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்து இருந்தார். ஜடேஜா 2 விக்கெட்களையும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார்.

இதன் மூலம் இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்