மதுரையில் பிரமாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம்.! இன்று மலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.!

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டு விழாவாக இந்த ஆண்டு பல்வேறு நலத்திட்டங்கள், புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரையில் கலைஞர் கூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
மதுரை நத்தம் சாலையில் கடந்தாண்டு துவங்கப்பட்டு சுமார் 206 கோடி ரூபாய் செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாயிலில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நுழைவு வாயில்கள் இதற்கு உள்ளன நூலகத்திற்கு செல்ல இரண்டு நுழைவு வாயில்களும், மாநாடு கூட கூடங்களுக்கு செல்ல இது இரண்டு நுழைவு வாயில்களும் என மொத்தம் மூன்று நுழைவு வாயில்கள் இருந்துள்ளன. படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள், கழிப்பறை வசதிகள் என மக்கள் வந்து படித்து செல்வதற்கு ஏதுவாக அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்குள் செல்ல எந்த எந்த கட்டணமும் கிடையாது.