பாண்டியா – சிவம் துபே ருத்ர தாண்டவம்! சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! 182 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ஓவர்களில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.

IND VS ENG 4TH T20 1ST innings

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற  டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று சூர்யகுமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4வது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி ஆரம்பம் முதலே தொடர்ந்து தாங்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும்,  திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் 20 மற்றும் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

14 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணியை சிவம் துபே மற்றும்  ஹர்திக் பாண்டியா மீட்டு பவுண்டரிகளை கடந்து ரன்களை குவித்தனர். ருத்ர தாண்டவம் ஆடிய பாண்டியா 30 பந்தில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 53 ரன்கள் விளாசினார். அடுத்து சிவம் துபே 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் விளாசினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 182 எனும் பலமான டார்கெட்டை கொடுத்துள்ளது இந்திய அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly