ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா மீண்டும் முதலிடம்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா. அதன்படி, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 25 போட்டிகள், 3,031 புள்ளிகள், 121 ரேட்டிங் பெற்று இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. 116 ரேட்டிங்களுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், 114 ரேட்டிங்களுடன் இங்கிலாந்து 3ம் இடத்திலும் உள்ளன.
இதனிடையே, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அபார வெற்றி பெற்றது முதல் நாக்பூரில் ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தியது காரணத்தால், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அணி:
இந்திய அணி: ரோகித்சர்மா (கேப்டன்), விராட்கோலி, சுப்மன்கில், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனத்கட், புஜாரா, ரஹானே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி: கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்லிஷ், கவாஜா, லபுசக்னே, லயன், மிட்ஷெல் மார்ஷ், மர்பி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
From a stunning win at Lord’s against England to dominating Australia in Nagpur ????
Relive some of India’s finest triumphs after they sealed top spot in the annual update of the @MRFWorldwide ICC Men’s Test Rankings ????https://t.co/3hVjHyjVAR
— ICC (@ICC) May 2, 2023