India vs Australia ODI [IMAGE SOURCE:X/@ICC]
உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மட்டுமே உலக கோப்பைக்கு முன்னர் நடைபெறும்.டி20 கிரிக்கெட் தொடர் ஒருநாள் உலக கோப்பை முடிந்த பிறகு நடைபெற உள்ளது.
எனவே, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை செய்தது. அதன்படி, முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தற்போது கேஎஸ் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
தற்போது, ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா (விளையாடும் XI): டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ்(w), மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ்(c), சீன் அபோட், ஆடம் ஜாம்பா ஆகியோர் உள்ளனர்.
இந்தியா (விளையாடும் XI): ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்(w/c), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…