இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். முதலாம் ஓவரிலே ரோரி பர்ன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின், 16 ரன்களில் டொமினிக் சிப்லி வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், 6 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர், 9 ரன்களில் லாரன்ஸ் வெளியேற, அதனைதொடர்ந்து 18 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். 23.2 ஆம் ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. 22 ரன்கள் எடுத்து ஆலி போப் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி 6 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இறுதியாக 59.5 ஓவரில் இங்கிலாந்து அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி, 195 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.இதனைதொடர்ந்து இந்திய அணி, தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள்.இதில் 11 ரன்கள் எடுத்து கில் வெளியேறினார்.இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. களத்தில் 25 ரன்களில் ரோகித் ஷர்மாவும், புஜாரா 7 ரன்களுடனும் இருந்தனர்.
3-ஆம் நாளான நேற்று இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. போட்டி தொடக்கத்தில் இந்திய அணி சற்று தடுமாறியது. 7 ரன்கள் அடித்து புஜாராவும், 26 ரன்கள் அடித்து ரோகித் சர்மா வெளியேறினார்கள். அதனைதொடர்ந்து களமிறங்கிய பண்ட் 6 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக ஆடிவந்தார். பின்னர் களமிறங்கிய ரகானே, 10 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் அடித்து கோலி வெளியேற, பின்னர் களமிறங்கிய அஸ்வின், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, சிறப்பாக ஆடிய அஸ்வின் 106 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி 85.5 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியில் பந்துவீச்சை தாங்காமல் தடுமாறியது.19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 53 ரன்கள் எடுத்தது.
429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இன்று ஆட்டத்தை தொடங்கியது.இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்கள். லாரன்ஸ் 26 ரன்கள்,ஸ்டோக்ஸ் 8 ரன்கள்,போப் 12 ரன்கள்,போக்ஸ் 2 ரன்கள் ,கேப்டன் ரூட் 33 ரன்கள் ,ஸ்டோன் டக் -அவுட் ,மொயீன் அலி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே அடித்தது.இதனால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகள்,குல்தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…