ODI Ranking : விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.! தரவரிசையில் முதலிடம்.! அசத்தும் முகமது சிராஜ்.!

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதுவும் முந்தைய போட்டியில் வங்கதேசத்துடன் சிறிய ரன் வித்தியாசத்தில் தோல்வியை கண்டு, அடுத்த ஆட்டத்திலேயே வெகுண்டெழுந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை எளிதில் கைப்பற்றியது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
இதற்கு முக்கிய பங்காற்றியவர் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ். அவர் ஆரம்ப கால கிரிக்கெட் போட்டிகளில் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்து விமர்சனங்களை எதிர்கொண்டு, அதன் பின்னர் பல்வேறு போட்டிகளில் களமிறக்கப்படாமல், அதன் பின்னர் கிடைத்த வாய்ப்புகளில் கடுமையாக முயற்சி செய்து வெற்றி கண்டு வருகிறார்.
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் சிராஜ் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதுவும் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும், 16 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி உலக சாதனையையும் படைத்தார் முகமது சிராஜ்.
இப்படி பல்வேறு சாதனைகளை செய்த காரணத்தால் ஒரே போட்டியில் 8 இடங்கள் முன்னேறி தற்போது ஒரு நாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிப்ரவரிக்கு பிறகு மீண்டும் கைப்பற்றி உள்ளார் முகமது சிராஜ். சிராஜ் 694 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஹசீல்உட் 678 புள்ளிகள் உடன் உள்ளார். அடுத்ததாக நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் 677 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரகுமான் 657 ரன்கள் உடன் நான்காம் இடத்திலும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் தான் 655 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 638 புள்ளிகளுடன் 9 இடத்தில் உள்ளார்.
ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். சுப்மன் கில் இரண்டாம் இடத்தில் உள்ளார். விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தில் உள்ளார். பத்தாவது இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். டி20 தர வரிசையில் இந்தியாவை சேர்ந்த சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களில் ரஷீத் கான் முதல் இடத்தில் உள்ளார்.