Drone Attack: உக்ரைனின் கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்யா.!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து ஒரு வருடகாலமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.உக்ரேனிய பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு ,படுகாயம் இருப்பிடம் இழப்பு என பல இன்னல் நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருவதோடு, தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை பெரும்பாலும் நிறுத்திக்கொண்டன.
இந்த நிலையில், உக்ரைனின் மத்திய பொல்டாவா பகுதியில் உள்ள கிரெமென்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரஷ்யா ஒரே இரவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்த சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவால் பலமுறை தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.