ஜிம்மில் தங்கள் ஆம்ஸ் காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்த இந்திய வீரர்கள்..!

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. பின்னர் இரண்டாவது போட்டி கடந்த 18-ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது.
Caption is above us ???????????????? pic.twitter.com/FIFN8FRqMQ
— Shreyas Iyer (@ShreyasIyer15) September 20, 2019
இந்திய வீரர்கள் தொடர் கைப்பற்றவேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜிம்மில் இந்திய வீரர்கள் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு தங்களது ஆம்ஸ் காட்டி புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் கேப்டன் கோலி , புவனேஷ்குமார் , தவான், பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளன.