தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிப்பு!

Published by
murugan

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டி கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால்  தென் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடர் ஒத்திவைப்பதாகவும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பங்கேற்கும் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

டெஸ்ட் போட்டிகள் :

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும்,
இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும்,
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.

ஒருநாள் போட்டிகள்:

முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

#BREAKING : ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கம்..!

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி தலைமையில் விளையாடயுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள்: 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா , முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்கூர், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

29 minutes ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

2 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

4 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

4 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

5 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

5 hours ago