இந்திய அணி வீரர்கள் எப்போதும் அழுத்தம் கொடுக்கின்றனர்..! நடுவர் நிதின் மேனன் பரபரப்பு கூற்று..!

Nitin Menon

இந்திய அணி வீரர்கள் அழுத்தம் கொடுப்பதாக, நடுவர் நிதின் மேனன் கூறியுள்ளார்.

ஐசிசி எலைட் பேனல் நடுவராக இருக்கும் நிதின் மேனன் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அது என்னவென்றால், இந்தியாவில் விளையாடும் போது, இந்தியா அணி வீரர்கள் நடுவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் எப்போதும் போட்டியின் முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், வீரர்களால் ஏற்படும் அழுத்தத்தை தவிர மற்ற எந்த சூழ்நிலையையும் கையாளும் அளவுக்கு நான் வலிமையானவன் என்பது எனக்கு தெரியவந்துள்ளது.

அது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளது. உள்நாட்டில் இந்திய சர்வதேச நடுவர்களின் குழுவை வழிநடத்துவதும் ஒரு பெரிய பொறுப்பாகும். ஆரம்பத்தில் எனக்கு அதிக அனுபவம் இல்லை. ஆனால், கடந்த மூன்று வருடங்கள் நான் நடுவராக வளர உதவியது என்று நிதின் மேனன் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிதின் மேனன் நடுவராக பணியாற்ற உள்ளார். ஐசிசி அவரை ஐசிசி எலைட் பேனலில் சேர்த்துக் கொண்ட ஜூன் 2020 முதல் 15 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 20 டி-20 சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்