இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குகொண்டு விளையாடுகிறது.அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோதுகிறது.
இந்திய அணியில் காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிரங்குகிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். த்னது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுவதால் ரசிகர்களின் எகோபித்த ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே போல் புதியதாக தலைமை பதவியேற்றுள்ள டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றியோடு ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இதனால் அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.அணியில் டூ பிளசிஸ், ஹெய்ன்ரிச் கிளாஸன், கைல் வெர்ரைன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சீல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க தவறாது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…