KKR-VS-RCB[file image]
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பார்களா என்று நாம் பொறுத்து இருந்து நாம் பார்க்க வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றுக்கு போவதற்கு பெங்களூரு அணி நீடித்து நிற்க வேண்டும் என்றால் இந்த போட்டியிலும், இனி வரவிருக்கும் போட்டியிலும் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 33 போட்டிகள் மோதியுள்ளது. அதில் 14 போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணி 19 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் கணக்குகளை வைத்து பார்க்கையில் அதிகமுறை கொல்கத்தா அணியே வெற்றிபெற்றுள்ளது.
பெங்களூர் அணி
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி
வெங்கடேஷ் ஐயர், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…