#IPL BREAKING: இறுதிவரை போராடிய பஞ்சாப்..! டெல்லி அணி அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs DC போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர், பிருத்வி ஷா இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில், பிருத்வி ஷா அரைசதம் கடந்தார். அதன்பின் ரோசோவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்க விட்டு 80 ரன்களை கடக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் ஜோடியில் தவான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரையடுத்து, களமிறங்கிய தைடே காயம் காரணமாக 55 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதன்பின், லிவிங்ஸ்டன் களமிறங்கி அதிரடி காட்டி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருந்தும், பஞ்சாப் அணி வீரர்கள் டெல்லி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 94 ரன்களும், அதர்வ தைடே 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 குவித்துள்ளனர். டெல்லி அணியில் அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025