#IPL2022 : மீண்டும் ஒரு தோல்வி சென்னைக்கு.! மீண்டும் ஒரு வெற்றி குஜராத்திற்கு.!

சென்னை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரஷீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின. இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.
20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலகுடன் களமிறங்கிய குஜராத் அணி, ஆரம்பத்தில் தடுமாறினாலும், மில்லர் கடைசி வரை களத்தில் நின்றார். மேலும் அவர்க்கு உதவியாக கேப்டன் ரஷீத் கானும் கை கொடுக்கவே, 18 ஓவரில் 6,4 என பவுண்டரி பறந்தது.
இதனை அடுத்து, 19.5 ஓவரில் 170 ரன்களை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025