யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே ரெக்கார்ட்டை வீழ்த்தி ஜடேஜா செய்த சம்பவம்….!

நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலின் சதங்கள் மற்றும் ரோகித் (61), சுப்மன் கில் (51), கோஹ்லி (51) ஆகியோர் அரைசதம் மூலம் 50 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டை இழந்து 410 ரன்கள் குவித்தனர். 411 ரன்களை சேஸ் செய்த நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு சாதனை படைத்துள்ளார்.
கும்ப்ளே (1996) மற்றும் யுவராஜ் (2011) உலகக்கோப்பைகளில் தலா 15 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் 16 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.
நடப்பு உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜாம்பா முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் பும்ரா 17 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்திலும், 16 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி 8-வது இடத்திலும் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025