ஜடேஜா மிகவும் விரக்தி அடைந்தார் .. எதுக்கு தெரியுமா ? அம்பதி ராயுடு ஓபன் டாக் !

Published by
அகில் R

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அவரும் ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம் என்று பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி கடந்த 2023 ஆண்டில் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது அந்த ஆண்டில் வெற்றி பெற்றதற்கு சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு பெரும் பங்காற்றி இருக்கிறார். மேலும், அந்த தொடரின் இறுதி போட்டி முடிந்த பிறகு அம்பதி ராயுடு தனது ஓய்வையும் அறிவித்திருந்தார்.

தற்போது அவர் சிஎஸ்கே ரசிகர்களை குறித்து முக்கியமான கருத்து ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது பகிர்ந்திருந்தார். கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா பேட்டிங் களமிறங்கியவுடனே மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே அவரை அவுட் ஆகும் படி கூச்சலிட்டு கொண்டே இருப்பார்கள், இது அப்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

மேலும், இதை பற்றி ஒரு முறை ஜடேஜா நேரடியாகவே சமூகவலைத்தளத்திலும் வருத்தமளித்திருந்தார். அதை தொடர்ந்து அந்த தொடரின் இறுதி போட்டியில் கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் அடித்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்திருப்பார். இது கூச்சலிட்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவர் தந்த பதிலடி போலவே அப்போது அமைந்து இருந்தது.

கடந்த வருடம் சிஎஸ்கே ரசிகர்கள் இப்படி தோனிக்கு மட்டும் பெரிய அளவில் ஆதரவு அளித்து செயல்பட்டு வந்தது ஜடேஜாவுக்கு விரக்தி அளிக்க கூடிய ஒன்றாக அமைந்தது என்ற உன்மையை அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார். இது குறித்து அவர் பேசுகையில்,”நீங்கள் ஒரு சிக்ஸர் அல்லது ஒரு பவுண்டரி அடித்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் கூட்டம் அமைதியாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பொழுது ஜடேஜாவும் நானும் இதை உணர்ந்தோம்.

நான் உண்மையாக சொல்கிறேன், சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனியின் ரசிகர்களாக தான் இருப்பார்கள் அதற்கு அடுத்துதான் அவர்கள் சிஎஸ்கே அணியின் ரசிகர்களாக இருப்பார்கள். இதனால் ரவீந்திர ஜடேஜா மிகவும் விரக்தி அடைந்தார். ஆனால் அவரால் அந்த தருணத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை”, என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அம்பதி ராயுடு கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

2 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

4 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

7 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

7 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

8 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

11 hours ago