Chris Jordan replaces injured Jofra Archer at Mumbai Indians. [Image Source : Twitter/@IPL]
மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் சேர்ப்பு.
நடப்பாண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியாக அமையவில்லை. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல இக்கட்டான நிலையில் உள்ளது.
மும்பை அணியில் பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், பும்ரா, ரிச்சர்ட்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து ஆரம்பத்திலேயே விலகியதால், பந்துவீச்சில் சிரமப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தொடர் காயம் காரணமாக மும்பை அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வராததால், வெறும் 5 போட்டிகளில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதில், 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து, 9.50 சராசரியில் ரன்கள் கொடுத்து அணிக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆர்ச்சர் விளையாடாத நிலையில், வரும் ஆஷில் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவரின் காயத்தின் தன்மையை கண்காணிக்க, மும்பை அணியில் இருந்து விலகி ஆர்ச்சர் நாடு திரும்புகிறார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் உடற்தகுதியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், அவர் நாடு திரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக, கிறிஸ் ஜோர்டன் மும்பை அணியில் சேர்க்கப்ட்டுள்ளார் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2 கோடிக்கு கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன் அணி வாங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ஜோர்டான் (வயது 34), இதுவரை 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜோர்டன் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 4 ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளார். வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார். இங்கிலாந்து அணிக்காக 87 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…