இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதி வருகிறது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவருமே அடித்தனர்.
இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறினர். இவர்களின் கூட்டணியில் அணியின் ரன்கள் வெகுவாக உயர்ந்தது.இந்நிலையில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அரைசத்தை நிறைவு செய்தனர்.
பின்னர் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய சுழல் பந்தில் ஜேசன் ராய் 66 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு ஜோ ரூட் இறங்கினர்.அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 109 பந்தில் 111 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மோர்கன் 1 ரன்னில் அவுட் ஆனார்.நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 44 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 79 ,ஜோஸ் பட்லர் 20 ,கிறிஸ் வோக்ஸ் 7 ரன்களுடன் வெளியேறினார்.இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது.
இந்திய அணி பந்து வீச்சில் ஷமி 5 விக்கெட்டை பறித்தார்.338ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…