ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த கிங் கோலி..??

Published by
பால முருகன்

ஐபிஎல் போட்டிகளில் 6,000 ரன்கள கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார். 

ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் விராட் கோலி  51வது ரன் எடுத்தபொழுது, ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 6,000 கடந்தது.  மேலும் 6,000 ரன்கள கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

விராட் கோலிக்கு அடுத்தபடியாக  சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், 3வது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், 4வது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், 5வது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் டாப் 5 வரிசையில் 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

2 minutes ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

2 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

4 hours ago