ருத்ரதாண்டவம் ஆடிய கே.எல்.ராகுல், ஹூடா.., 221 ரன்கள் குவித்த பஞ்சாப் ..!

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தனர்.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 14 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர், 4 பவுண்டரி என மொத்தம் 40 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா உடன் கூட்டணி வைத்த கே.எல்.ராகுல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் விளாசினர்.
அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா 28 பந்தில் 64 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். தீபக் ஹூடா, கே.எல்.ராகுல் கூட்டணியில் 103 ரன்கள் எடுத்தனர். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் முதல் பந்திலே விக்கெட்டை இழந்தார். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தனர். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025