‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் மோதியது. இப்போட்டியில் சென்னையை அணியை வீழ்த்தி லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக எம்எஸ் தோனி 9 பந்துகளில் 24 ரன்கள் அடித்து மிரட்டினார்.

முதல் இன்னிங்ஸில் தோனியின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இருந்தாலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன்பின் வெற்றி குறித்து லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது, இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் எங்கள் திட்டங்களில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

விக்கெட்டைப் பொறுத்து, நான் எனது பந்துவீச்சாளர்களை செயல்படுத்தினேன். அதன்படி எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். சென்னை அணியை 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தால் நான் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஏனெனில் விக்கெட் மெதுவாக இருப்பதைப் போல் உணர்ந்தேன். இதனால் 160 – 165 என்ற இலக்கு சரியாக இருக்கும் என நினைத்தேன் என்றார்.

இதையடுத்து கேஎல் ராகுல் கூறியதாவது, எம்எஸ் தோனி களத்திற்குள் வந்ததும் பவுலர்கள் அழுத்தத்திற்கு உள்ளானார்கள். அதேசமயம் ரசிகர்கள் தோனி வருகையை பார்த்து ஆர்ப்பரித்தனர். இங்கு மினி சென்னை மக்கள் முன்னிலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அத்தகைய கூட்டத்திற்கு முன்னால் நாங்கள் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் அணி ஒரு இளம் அணி.

எதிரணியை மிரட்டும் அளவுக்கு தோனியின் ஆட்டம் இருந்ததால் அவரை கூடுதலாக 15 – 20 ரன்கள் எடுத்தனர் என தோனிக்கு புகழாரம் சூட்டினார். இதனிடையே, போட்டிக்கு முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பிரத்யேக பேட்டியளித்த கேஎல் ராகுல், எம்.எஸ்.தோனி எப்போதுமே ஒரு வெளிப்படையான நபர்.

தோனியிடமிருந்து அறிமுக தொப்பிகளைப் பெற்றது தான் எனது கிரிக்கெட் கேரியரில் ஒரு சிறந்த தருணம். என்னை அவர் தான் அறிமுகம் செய்து வைத்தார் என கூறியிருந்த நிலையில், சென்னைக்கு எதிரான போட்டிக்கு பிறகு மீண்டும் எம்எஸ் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

54 minutes ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

1 hour ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

2 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

3 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

3 hours ago