லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்..அர்பன்ரைசர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி.!

ICvsURH

இந்த ஆண்டில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று ஐந்தாவது லீக் போட்டியானது ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதியது.

இந்தியா கேப்பிடல் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கியது. டுவைன் ஸ்மித், மார்ட்டின் குப்டில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆனால் இருவரும் சரியாக விளையாடாமல் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இதனை அடுத்து குர்கீரத் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா களமிறங்கி அதிரடியாக விளையாடினார்கள். ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சுரேஷ் ரெய்னா அரை சதத்தை தவறவிட்டு 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் குர்கீரத் சிங் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து அசத்தினார்.

அவரையடுத்து, பீட்டர் ட்ரெகோ களமிறங்கி குர்கீரத் சிங்குடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரெய்னா அரைசதத்தை தவறவிட்டது போல குர்கீரத் சிங் தனது சதத்தைத் தவறவிட்டு 89 ரன்களில் வெளியேறினார். முடிவில், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்தியா கேப்பிடல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கௌதம் கம்பீர் வந்த வேகத்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க,  அவருடன் இணைந்து களமிறங்கிய ஹாசிம் ஆம்லா, பீட்டர் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

இதன்பிறகு கிர்க் எட்வர்ட்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் களமிறங்கி விளையாடினார்கள். எட்வர்ட்ஸ், பெஸ்ட் பேசிய பந்தில் குர்கீரத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பென் டங்க் களமிறங்கி 5 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆக, கெவின் பீட்டர்சன் அரைசதத்தை கடந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய ரிக்கார்டோ பவல் 26 ரன்களில் வெளியேற, சில நிமிடங்களில் கெவின் பீட்டர்சன், சுயல் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஆஷ்லே நர்ஸ் 41 ரன்கள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை. முடிவில் இந்தியா கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கெவின் பீட்டர்சன் 77 ரன்களும், ஆஷ்லே நர்ஸ் 41 ரன்களும் எடுத்துள்ளார்கள். அர்பன்ரைசர்ஸ் அணியில் கிறிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels
mythri movie makers naveen
US President Donald Trump
virat kohli BCCI