80ஸ் பில்டப் முதல் துருவ நட்சத்திரம் வரை..! நாளை வெளியாகவுள்ள அட்டகாசமான திரைப்படங்கள் இதோ.!

80sBuildup

தமிழ் திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த நவம்பர் மாதமும் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், சில திரைப்படங்கள் இன்னும்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில் நாளை உலக திரையரங்குகளில் வெளியாக உள்ள நான்கு திரைப்படங்களை நாம் இப்பொழுது காணலாம்.

80ஸ் பில்டப்

ஜாக்பாட், குலேபகவாலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் பில்டப் (80’s Buildup) என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ராதிகா ப்ரீத்தி, ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த் போன்றோர் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கே.இ.ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

குய்கோ

கடந்த 2016 ஆண்டு விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்த டி அருள் செழியன், இந்த குய்கோ படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, ஸ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் யோகி பாபு, சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை வளர்க்கும் ஒரு சாமானிய மனிதராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ

அறிமுகம் இயக்குனராக களமிறங்கும் ஹரிஹரன் ராம் இயக்கத்தில், நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இந்த ‘ஜோ’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்து குமார், இந்த ‘ஜோ’ திரைப்படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இதில் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா, அன்பு தாசன், ஏகன் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன் மற்றும் திவ்யா தர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. ஆனால் இப்போது படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்து இறுதியாக படம் நாளை முதல் உலகெங்கிலும் உள்ளத் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால் இப்படத்தை நாளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சிம்பு நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு ரூ.2.40 கோடியை பெற்ற கெளதம் மேனன், படத்தை முடிக்காமல் பணத்தையும் திருப்பித் தரவில்லை என துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடைக்கோரி பணம் கொடுத்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்குத் தொடந்தது.

இந்த வழக்கில், வாங்கிய பணத்தை நாளை காலை 10.30 மணிக்குள் கௌதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்