மேஜர் லீக் 2023.! அமெரிக்காவிலும் மாஸ் காட்டும் சூப்பர் கிங்ஸ்… 69 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.!

Published by
மணிகண்டன்

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி போல பல்வேறு நாடுகளில் உள்ளூர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்கியுள்ளது. இதில்சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அங்கும் அணிகளை ஏலத்தில் எடுத்து முறையே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், MI நியூ யார்க் எனும் பெயரில் களம் காணுகின்றன. இது போக 3 அணிகள் என மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன.

இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு இந்த போட்டிகள் துவங்குகின்றன. இன்று முதல் நாள் ஆட்டத்தில் ஃபாப் டுபிளசி தலைமையிலான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், சுனில் நரேன் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து இருந்தது.  அதிகபட்சமாக மில்லர் 61, கான்வே 55 ரன்களும் எடுத்து இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது.  நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் 55 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும். இறுதியில் 14 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 112 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் டெக்சாஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கல்குவாரி விபத்தில் 5 பேர் பலியான சோகம்.! பேரிடர் மீட்பு படை விரைவு..,

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

9 minutes ago

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

6 hours ago

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

7 hours ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

8 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

8 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

9 hours ago